மகாமந்த்ர (நாமா) மஹிமை – Glories of Mahamantra!

பிச்சை பாத்திரங்களான நாம் அனைவருக்கும் நாமப்பிச்சை அளித்த அந்த  வைர வைடூரிய  அட்சய  பாத்திரத்திற்கு (our beloved Guruji, His Holiness Sri Sri Muralidhara Swamiji அவர்களுக்கு ) இந்த பாடல் சமர்ப்பணம்...!!!

By Priya ji, Namadwaar Singapore.

ஆதலால் நாமம் சொல்வீர் !!  காதலால் நாமம் சொல்வீர் !!!

நாமத்தின் சுவை என்ன?
பாலோ அல்லது தேனோ
அல்லது இரண்டும் கலந்ததோ..
என்று தானே நினைக்கிறாய் மனமே..
இல்லை இல்லை.. அது அமிர்தத்தின் சுவையன்றோ..

எப்படி?..

உன் இருதயத்தை பாற்கடலாக்கி
பக்தியையே மந்திரமலையாக்கி
நாமக்கயிறு கொண்டு கடைந்துவிடு...

அமிர்தத்தின் சுவை விளங்கும்..
உன் ஆன்மாவே அமிர்தம் ஆகும்...

ஒரே ஒருமுறை நாமம் சொல்லிப்பார் புண்ணிய ஜீவனே..
அது என்னவெல்லாம் தரும் தெரியுமா...!!

(நாமா தேடலில் விளைந்த பாடல்)

ஹரே ராம நாமம் சொல்லு புண்ணிய ஜீவனே
அது- தாயை போல உன்னை காக்கும் புண்ணிய ஜீவனே

ஹரே ராம நாமம் சொல்லு புண்ணிய ஜீவனே
பதி னாரு வகை செல்வம்  சேரும் புண்ணிய ஜீவனே

ஹரே ராம நாமம் சொல்லு புண்ணிய ஜீவனே
அது- காதில் இன்ப தேனை ஊற்றும் புண்ணிய ஜீவனே

ஹரே ராம நாமம் சொல்லு புண்ணிய ஜீவனே
அது- சித்த சுத்தி நல்கி தரும் புண்ணிய ஜீவனே

ஹரே ராம நாமம் சொல்லு புண்ணிய ஜீவனே
ஏழு ஜென்ம பாவம் போக்கும் புண்ணிய ஜீவனே

ஹரே ராம நாமம் சொல்லு புண்ணிய ஜீவனே
தெய்வம் உந்தன் வாசல் வரும் புண்ணிய ஜீவனே

ஹரே ராம நாமம் சொல்லு புண்ணிய ஜீவனே
உந்தன் ஞான கண்கள் திறந்து கொள்ளும் புண்ணிய ஜீவனே

ஹரே ராம நாமம் சொல்லு புண்ணிய ஜீவனே
பக்தி ஒன்றே சொர்க்கமாகும் புண்ணிய ஜீவனே

ஹரே ராம நாமம் சொல்லு புண்ணிய ஜீவனே
உன் இதயம் உனக்கு அடங்கிப்போகும் புண்ணிய ஜீவனே

ஹரே ராம நாமம் சொல்லு புண்ணிய ஜீவனே
இந்த உலகம் உன்னுள் சுருங்கிப்போகும் புண்ணிய ஜீவனே

ஹரே ராம நாமம் சொல்லு புண்ணிய ஜீவனே
உன் ஆறாம் அறிவு(உ)ன் அடிமையாகும் புண்ணிய ஜீவனே

ஹரே ராம நாமம் சொல்லு புண்ணிய ஜீவனே
ஏழாம் அறிவாய் நாமம் மாறும் புண்ணிய ஜீவனே

ஹரே ராம நாமம் சொல்லு புண்ணிய ஜீவனே
தெய்வம் உனது குழந்தை ஆகும் புண்ணிய ஜீவனே

ஹரே ராம நாமம் சொல்லு புண்ணிய ஜீவனே
உன் வாழ்க்கை  இன்ப வரமாய் ஆகும் புண்ணிய ஜீவனே

ஹரே ராம நாமம் சொல்லு புண்ணிய ஜீவனே
சொர்க்கம் உந்தன் சொந்தமாகும் புண்ணிய ஜீவனே

ஹரே ராம நாமம் சொல்லு புண்ணிய ஜீவனே
உன் பிறவிப்பலன் உன்னை சேரும் புண்ணிய ஜீவனே

ஆதலால் நாமம் சொல்வீர்..!!!
சற்றும் தாமதிக்காதே மனமே..

வாழ்க்கை சிறையினில்  நீ இருந்தாலும்
சம்சார சாகரத்தில் நீ இருந்தாலும் - ஏன்
கருவறையில் கூட நீ இருந்தாலும்
சலிக்காமல் நாமம் சொல்லிடு மனமே...

பக்தி ஒன்றே சொத்தாக
நாமாவே  உயிர் மூச்சாக சபதம் எடு..

விண்ணைத் தாண்டி நீ போக வேண்டியதில்லை
உன்னைத் தேடி அவன் வருவான்...

நாமா வெறும் ஒலி மட்டும் அல்ல
அது  உளியும் கூட...
அற்பமான நம்மை செதுக்கி செதுக்கி சிற்பமாக்கும்...

வஞ்சக உலகில் அவனை தஞ்சம்புக
இரு கண்கள் போதாது...
உனக்கு ஞானக்கண்ணை நாமா பெற்று தரும்...

இரை தேடும் மனிதனான உன்னை
இறை தேடும் ஜீவனாக்கும்..

அனுதினமும்  நீ சொல்லும் நாமம்
அவன் செவிக்கு எட்டும்...

நாமம் சொல்லும் நம் அனைவருக்கும்
நிச்சயம்  அவனருள் கிட்டும்...

பக்தி ஒன்றே சொத்தாக
நாமாவே  உயிர் மூச்சாக  தவம் செய்

யார் கண்டது....
ஆழ்வார்கள் பட்டியலில் பதின்மூன்றாம் ஆழ்வாராய் உன் நாமமும்  சேர்க்கப்படலாம்...

***

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே

HARE RAMA HARE RAMA RAMA RAMA HARE HARE

HARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE

***

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>