இப்படிக்கு கிருஷ்ணன்!!! – Conversation series with God Part 2

[A series of writing dedicated to Sri Premikavaradhan Madhurisakhi and H.H. Sri Sri Muralidhara Swamiji, by Priya ji, Singapore Namadwaar]

Read complete series here

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே 

---------- இப்படிக்கு கிருஷ்ணன்!!! - ஹைக்கூ 5 ------------

பக்தன் : கயல்விழி கண்ணா!!! மீனுக்கும் உனக்கும் சம்பந்தம் உண்டோ?

கிருஷ்ணன் : நிச்சயம் உண்டு...
இமை மூடி உறங்குவதில்லை மீன்கள்!!
என் பக்தனை காக்கும் பொறுப்பு இருப்பதால் நானும் உறங்குவதில்லையடா!!
வலையில் மாட்டிக்கொண்ட மீன்கள் தப்பிக்க முடியாது...
பக்தனின் பக்தி வலையில் சிக்குண்ட நானும் தப்பிக்க முடிவதில்லை...
உனக்கு தான் தெரியுமே...
முக்தியை கூட நான் சீக்கிரம் தந்துவிடுவேன்!!
ஆனால் பக்தியை அவ்வளவு எளிதில் யாருக்கும் நான் தருவதில்லையப்பா!!

---------- இப்படிக்கு கிருஷ்ணன்!!! - ஹைக்கூ 6 ------------

பக்தன் : கண்ணா ஒரு மனிதன் மோகத்தையும் தாகத்தையும் எதனிடத்தில் வைக்க வேண்டும்?

கிருஷ்ணன் : மிக எளிது!!
மோகத்தை நாமத்திலும்
தாகத்தை கிருஷ்ணனிடத்திலும் (என்னிடத்திலும்)
வைத்து விடு!!

I mean...Fall in love with NAAMAA!!!

(கண் சிமிட்டுகிறான் கண்ணன்!!
காதலில் விழுகிறான் பக்தன்!!)

---------- இப்படிக்கு கிருஷ்ணன்!!! - ஹைக்கூ 7 ------------

பக்தன் : என் தர்மபிரபோ!!
மனிதனை படைத்த நீ..
அன்று ஒருமுறை மனிதனாய் வாழ்ந்து காட்டினாய்..
மாடு மேய்த்தவன்  நீ.. என்றாவது கன்றுக்குட்டியாய் ஆனதுன்டா?

கிருஷ்ணன் : என்றாவது இல்லை!!..
எப்போதுமே!!
ஆத்மார்த்தமாய் நாமா சொல்லும்
ஒவ்வொரு பக்தனின் பின்னும்
நானும் ஒரு கன்றுக்குட்டி ஆகிறேனடா...

---------- இப்படிக்கு கிருஷ்ணன்!!! - ஹைக்கூ 8 ------------

பக்தன் : நாழிகை சொன்னாலே வேண்டும் வரம் தருவாய்...
நாள்  முழுதும் சொன்னால் என்ன தருவாய் கிருஷ்ணா?

சற்றும் யோசிக்காமல் சொல்கிறான் கிருஷ்ணன்...
"என்னையே தருவேனடா!!!"

Leave a Reply