இப்படிக்கு கிருஷ்ணன்!!! – Conversation series with God Part 1

[A series of writing dedicated to Sri Premikavaradhan Madhurisakhi and H.H. Sri Sri Muralidhara Swamiji, by Priya ji, Singapore Namadwaar]

Read complete series here

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே 

--------- இப்படிக்கு கிருஷ்ணன்!!! - ஹைக்கூ 1 ---------

பக்தன் : என் அன்பு கிருஷ்ணா!!
நாமா சொல்வதற்கு வயது வரம்பு ஏதும் உண்டா?
யாரெல்லாம் சொல்லலாம்?

கிருஷ்ணன் : கருவறை முதல் கடைசி பயணம் வரை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.
நாமா சொல்வதற்கு வயது வரம்பு கிடையாது..
ஆனால் ஒரு ரஹசியம்!!  நாமா சொல்பவர்க்கு வயது "என்றும் பதினாறு"!!!..
(சொல்லிவிட்டு குறும்பாய்  சிரிக்கிறான் கண்ணன்!!!..
அரும்பாய் மலர்கிறான் பக்தன்!!)

--------- இப்படிக்கு கிருஷ்ணன்!!! - ஹைக்கூ 2---------

பக்தன் : என் தெய்வப்பிரபோ ... ரசவாதத்திற்கும் நாமாவுக்கும்  சம்பந்தம் உண்டோடா கண்ணா?

கிருஷ்ணன் : ஏன் இல்லை.. இரும்பையும்  தங்கமாய் மாற்றுவது ரசவாதம்.....
மனிதன் செய்த பாவங்களையெல்லாம் புண்ணியமாய் மாற்றுவது அவன் பாடும் நாமா மட்டுமே...
அதனால் மனிதா!!!
சலிக்காமல் நாமா சொல்...
தயங்காமல் உன்னிடம் வருவேன்...
ஆம்...
புண்ணியம் இலவசம்!!!
நானோ உன்வசம்!!!

--------- இப்படிக்கு கிருஷ்ணன்!!! - ஹைக்கூ 3 ---------

பக்தன் : கண்ணா!! மனிதன் சாதனை பல செய்கிறான்...
தொட முடியாத உயரம் பறக்கிறான்..
சிகரங்கள் கூட தொட்டுவிடுகிறான்...
உலகில், மனிதன் தொட முடியாத உயரம் எதுவோ கண்ணா ?

கிருஷ்ணன் : என் இதயம் தான்!!!
அவன் இதயத்தில் நான் வருவது கூட நடந்துவிடும்...
ஆனால் என் இதயம் தொட்டவர்கள் மிக குறைவு...
நாமா சொல்லிப்பார்..
அதுவும் நடக்கும்....

--------- இப்படிக்கு கிருஷ்ணன்!!! - ஹைக்கூ 4 ---------

பக்தன் : கிருஷ்ணா!!!
ஒரு ஆண் ஒரு பெண்ணின் மேல் வைத்திருக்கும் காதல் பெரிதா?
ஒரு தாய் தன் குழந்தை மேல் வைத்துள்ள பாசம் பெரிதா?
ஒரு குழந்தை தாயிடம் வைத்துள்ள அன்பு பெரிதா?

கிருஷ்ணன் : ஒரு பக்தன் என் மேல் கொண்டுள்ள பக்தி தான் பெரிது...
நீ சொன்ன காதல், பாசம் , அன்பு யாவும்
ஐம்புலன்களின் ஆதரவால் , ஆதிக்கத்தால் வருபவை...
மற்ற விஷயங்களுக்கெல்லாம்  குறைந்தது, பார்வையாவது வேண்டும்....
ஆனால் பக்தி மலரும் இடம் ஹ்ருதயம் மட்டும் தானே?
என்னை பார்த்ததில்லை என் குரல் கேட்டதில்லை..
அவன் வேண்டுதல் அனைத்தும் நான் நிறைவேற்றுவதும்  இல்லை
இருந்தும் என்னை நேசிக்கும் அந்த ஜீவனுக்கு
அவனின் பக்திக்கு நான் அடிமையடா!!!
என்னை எப்போதும் நினைக்கும் அந்த பக்தியில் தான்
நான் என்னையே மறக்கிறேன்....

Stay tuned! Keep chanting Mahamantra at all times.

Leave a Reply