Bhibhadha Bhagavadham
Please click the link to read the slokas...............
21. पिबत भागवतम्। பிபத பாகவதம்.
अहो बत स्वर्यशस्तिरस्करी कुशस्थली पुण्ययशस्करी भुवः।
पश्यन्ति नित्यं यदनुग्रहेषितं स्मितावलोकं स्वपतिं स्म यत्प्रजाः॥१-१०-२७॥
द्वारकां श्लाघन्ते अहो बत अत्याश्चर्यम्। किं तत् ? कुशस्थली द्वारका। स्वर्गः उत्कृष्टः इति यद्यशः तस्य तिरस्करी परिभवकर्त्री। भुवश्च पुण्ययशःकर्त्री भवति । यद्यतो यत्रत्याः सर्वाः प्रजाः स्वानुग्रहेणेषितं प्रेषितम्। स्मितपूर्वकः अवलोकः यस्य तम्। स्वस्य आत्मनः पतिं श्रीकृष्णं न तु पित्रादिवत् देहमात्रपतिं नित्यं पश्यन्ति स्म । नैतत्स्वर्गेऽस्तीत्यर्थः॥श्रीधरः॥
த்வாரகை ஸ்வர்கத்தைக் காட்டிலும் சிறந்தது என்கிறார். “ஸ்வர்கம் தான் மிகவும் சிறந்தது” என்ற எந்த ஒரு புகழுண்டோ அதை மறுத்து அந்த ஸ்வர்கத்தை அவமதிப்பது போல் இருக்கிறது இந்த த்வாரகை. மேலும், த்வாரகை பூமியில் இருப்பதால் ஸ்வர்கத்தைக் காட்டிலும் பூமியின் புகழ் அதிகரித்தது எனகிறார். ஏனென்றால்….. எப்பொழுதம் புன்னகையுடன் கலந்த பார்வையால் பார்ககின்றவரும்,தங்களின் நாதனுமான க்ருஷணரை ஸதா அந்த த்வாரகா ப்ரஜைகள் பார்ககிறார்களல்லவா.. இந்த பாக்யம் ஸ்வர்கத்திலும் கிடையாதே.. என்கிறார். மேலும், ‘ஸ்வபதிம்’ என்ற சொல்லால் தகப்பனார் போன்றவர் போல் தேகத்திற்கு மட்டும் நாதனல்ல ஆத்ம நாதன் அந்த க்ருஷ்ணர் என்கிறார்.
20. पिबत भागवतम्। பிபத பாகவதம்.
सत्सङ्गान्मुक्तदुःसङ्गो हातुं नोत्सहते बुधः।
कीर्त्यमानं यशो यस्य सकृदाकर्ण्य रोचनम्॥१-१०-११॥
सतां सङ्गाद्धेतोः मुक्तः पुत्रादिविषयो दुःसङ्गो येन सः। सद्भिः कीर्त्यमानं रुचिकरं यशः सकृदप्याकर्ण्य सत्सङ्गं त्यक्तुं न शक्नोति॥श्रीधरः॥
ஸத்ஸங்கம் கிடைப்பதாலேயே ஒருவனுக்கு துஷ்ட ஸங்கம் நீங்கி விடுகின்றது. அதனாலேயே மனதிற்கு ஸுகமாக இருக்கின்றது. மேலும் ஸாதுக்கள் பகவானுடைய இனிமையான கதைகளை சொல்லிக்கொண்டிருப்பார்கள். அதை ஒரே ஒரு தடவை கேட்டு விட்டு அதற்கு பிறகு அந்த ஸங்கத்தை விடுவதற்கு முடிகிறதில்லை.
19. पिबत भागवतम्। பிபத பாகவதம்.
नानुद्वेष्टि कलिं सम्राट् सारङ्ग इव सारभुक्।
कुशलान्याशु सिद्ध्यन्ति नेतराणि कृतानि यत्॥१-१८-७॥
सारमाह यद्यस्मिन्कुशलानि पुण्यान्याशु सङ्कल्पमात्रेण फलन्ति इतराणि पापान्याशु न सिद्ध्यन्ति यतस्तानि कृतान्येव सिद्ध्यन्ति न तु सङ्कल्पमात्राणीति॥श्रीधरः॥
பரீக்ஷித் கலியை வெறுக்கவில்லை. ஒரு வண்டானது எப்படி முள்ளிருக்கும் புஷ்பத்திலிருந்தும் கூட தனக்கு வேண்டிய சாரமான தேன் எடுத்து கொள்கிறதோ, அதே போலே பரீக்ஷித்தும் சாரக்ராஹியாக இருப்பதால் கலியில் இருக்கும் சாரத்தை பார்த்து அதை விட்டு விட்டான்.
அந்த சாரம் என்னவென்றால்… “கலியில் புண்ய கர்மாக்களை நினைத்தமாத்திரத்தில் பலன் தருகின்றன. ஆனால், பாபகர்மாக்களோவென்றால் செய்தால் தான் பாபம், நினைப்பதால் இல்லை.” என்பதேயாகும்.
18. पिबत भागवतम्।பிபத பாகவதம்.
अहो महीयसी जन्तोः जीविताशा यया भवान्।
भीमापवर्जितं पिण्डं आदत्ते गृहपालवत्॥१-१३-२२॥
உலகத்தில் எல்லோரும் ஒரு கஷ்டம் வரும்போது புலம்புகிறோம், பகவானிடத்தில் சென்று கஷ்டம் போகும்படி ப்ரார்த்திக்கின்றோம். கஷ்டத்திற்கு காரணமானவர்களை வெறுக்கின்றோம். மீண்டும் அவர்களால் ஏதாவது கார்யம் ஆகவேண்டி இருந்தால் ஏல்லாவற்றையும் மறந்து விடுகின்றோம்(மறப்பது என்பது நல்லது தான். ஆனால், ‘இதெல்லாம் பகவானின் இச்சையால் நடக்கின்றது’ என்ற வைராக்ய புத்தியோடு அது இருக்க வேண்டும்). அதற்கு காரணம்… நாம் எப்படியாவது வாழ வேண்டும் என்ற ஆசை தான். அந்த ஆசையானது மிக பெரியது. அதை தாண்டி வருவது என்பது மிகவும் ச்ரமம். மகாபாரதத்தில் த்ருதராஷ்ட்ரன் யாரை சிறிய வயதிலேயே கொன்று விட வேண்டுமென்று திட்டமிட்டானோ, யார் தன் பிள்ளையின் நஞ்சை கிழித்து ரத்தத்தை குடித்தானோ, யார் தன் பிள்ளைகளை பாதிக்கும் மேற்பட்டவர்களை கொன்றானோ, போர் முடிந்த பிறகு யாரை தன் ஆலிங்கனத்தால் கொன்று விட வேண்டுமென்று எண்ணினானோ அந்த பீமன் வீசி எறியும் சோற்றை மேல் விஷயங்கள் எல்லாம் மறந்து எப்படியாவது தேகத்தை போஷித்தால் போதுமென்ற எண்ணம் கொண்டவனாய் ஒரு நாய் போல் சாப்பிட்டான் என்கிறார். அதை விதுரர் பார்த்து, அண்ணாவிற்கு வைராக்யத்தை ஊட்ட வேண்டுமென்று சிந்தித்து உபதேசம் செய்கிறார்.
17. पिबत भागवतम्।பிபத பாகவதம்.
वंशं कुरोर्वंशदवाग्निनिर्हृतं संरोहयित्वा भवभावनो हरिः।
निवेशयित्वा निजराज्य ईश्वरो युधिष्ठिरं प्रीतमना बभूव ह॥१-१०-२॥
வம்சம் என்ற காட்டில் உண்டான கோபம் என்ற அக்னியால் எரிக்கப்பட்ட குருவம்சத்தை பரீக்ஷித்தை காத்ததன் மூலம் மறுபடியும் அந்த காட்டை துளிர்த்தினார் பகவான். யுதிஷ்டிரனுக்கும் பட்டாபிஷேகம் செய்தார்.
இந்த ச்லோகத்தில் பகவானை “பவபாவன:” என்கிறார். “பவ” என்ற சொல்லிற்கு வளர்ச்சி என்றும் சிவன் என்றும் பொருட்கள் இருக்கின்றன. பாவன: என்றால் உண்டுப்பண்ணக்கூடிவர் என்று பொருள். பக்தர்களுடைய வளர்ச்சியைத் தருபவர் என்று பொருள். அதே மாதிரி பாவன: என்றால் நினைக்கவைப்பவர் என்றும் பொருள். சிவனை ஸதா தன்னுடைய லீலைகளை த்யானம் செய்யும்படி செய்கிறவர் என்று பொருள்.
ஒரு பெரிய யுத்தம் செய்து, அதில் ஜெயித்து இப்பொழுது பட்டாபிஷேகம் செய்து கொண்ட யுதிஷ்டிரனுக்கு கூட அவ்வளவு ஸந்தோஷமில்லை. ஆனால், அதறகு மாறாக ‘தான் பந்துக்களுக்கு த்ரோஹம் செய்து விட்டோமே’ என்ற கவளைத் தான் இருந்தது. ஆனால், உன்மையாக ஸந்தோஷப்பட்டது யார் என்றால்… பகவான் தான் “ப்ரீதமனா ப்பூவ ஹ” என்கிறார். கேட்கிறார்களோ, கேட்கவில்லையோ.. ஆனால், கஷ்டப்படுகின்ற தன் பக்தர்களை ஸௌக்யமாக வைப்பது தான் பகவானுக்கு ஸத்தோஷம் என்கிறார்.
16. पिबत भागवतम्। பிபத பாகவதம்.
सितातपत्रव्यजनैरुपस्कृतः प्रसूनवर्षैरभिवर्षितः पथि।
पिशङ्गवासा वनमालया बभौ घनो यथार्कोडुपचापवैद्युतैः॥१-११-२७॥
பகவான் த்வாரகைக்குள் நுழையும் அழகை வர்ணிக்கிறார். வெண்குடை, இரண்டு பக்கமும் இரண்டு சாமரங்கள், மெலிருந்து பஷ்ப மழை, கழுத்தில் வனமாலை, இடுப்பில் பட்டு பீதாம்பரம், இவரோ கருப்பான நிரம் இதை பார்ப்பதற்கு எப்படி இருக்கு என்றால் அந்த வெண்குடையே சூரியன் போலவும், இரண்டு சாமரங்களும் இரண்டு சந்திரன் போலவும், புஷ்பங்கள் நக்ஷத்திரங்களாகவும், வனமாலை இந்திர தனுவாகவும், பீதாம்பரம் மின்னல் கொடியாகவும், இவரோ நீருண்ட மேகம் போலவும் இருக்கிறார் என்று அபூதோபமாலங்காரம்.
15.पिबत भागवतम्। பிபத பாகவதம்.
स उच्चकाशे धवलोदरो दरोऽप्युरुक्रमस्याधरशोणशोणिमा।
दाध्मायमानः करकञ्जसम्पुटे यथाब्जखण्डे कलहंस उत्स्वनः॥१-११-२॥
பகவான் சங்கத்தை ஊதுகிற அழகை வர்ணிக்கின்றார். அந்த சங்கமோ இயர்க்கையில் வெண்மையாக இருந்தபோதிலும் பகவானுடைய தாமரைப் போன்ற உதடுகளில் பட்டதும் அந்த உதட்டின் சிவப்பு சங்கத்திற்கு ஒட்டிக்கொண்டு அதுவும் சிவப்பாக தெரிகிறது. மேலும் பகவானுடைய தாமரைப் போன்ற கரங்களுக்கு நடுவில் இருந்து கொண்டு தாமரை குளத்தில் ஸஞ்சரிக்கும் ராஜஹம்ஸம் எப்படி நாதம் செய்யுமோ அது போல் நாதம் செய்கிறது என்கிறார்.
14.पिबत भागवतम्। பிபத பாகவதம்.
शृण्वन्ति गायन्ति गृणन्त्यभीक्ष्णशः स्मरन्ति नन्दन्ति तवेहितं जनाः।
त एव पश्यन्त्यचिरेण तावकं भवप्रवाहोपरमं पदाम्बुजम्॥१-८-३६॥
பகவானுடைய கதைகளை யார் கேட்கிறார்களோ, பாடுகிறார்களோ, சொல்கிறார்களோ, எப்பொழுதும் நினைத்துக்கொண்டே இருக்கிறார்களோ, அவ்வாறு பகவத்குணத்தை அனுபவிக்கும் ஸாதுக்களைப் பார்த்து மகிழ்கிறார்களோ அவர்களே ஸம்ஸாரத்தை போக்கக்கூடியதான தங்களுடைய திருவடியை பார்க்கிறார்கள்.
இங்கு ‘விச்வநாத சக்ரவர்த்தி’ என்ற மஹான் அர்த்த ஸௌந்தர்யத்திற்காக ஆறு விதமான தீர்மானங்களை காட்டுகிறார்.
‘த ஏவ’ என்பதால் யார் மேல் சொன்ன விஷயங்களை செய்கிறார்களோ அவர்களே பார்க்கிறார்கள். மற்றவரால் இயலாது என்று புரிகிறது.
‘பச்யந்தி’ என்பதால் நிச்சயம் பார்ப்பார்கள். ஸந்தேகமில்லை என்று புரிகிறது.
‘அசிரேண’ என்பதால் வெகு சீக்கிரமாகவே பார்த்து விடுவார்கள். நீண்ட காலமாகாது என்று புரிகிறது.
‘தாவகம்’ என்பதால் ஸாக்ஷாத் பகவானுடைய திருவடியையே. பகவானுடைய அம்சங்களான தேவதாந்தரத்தை இல்லை என்று புரிகிறது.
‘பவப்ரவாஹோபரமம்’ என்பதால் நிச்சயம் ஸம்ஸாரத்தை போக்கக்கூடியதே. ஸந்தேஹமில்லை என்று புரிகிறது.
‘பதாம்புஜம்’ என்பதால் ப்ரத்யக்ஷமாக திருவடியை பார்ப்பார்கள். ஸ்வரூபத்தை இல்லை என்று புரிகிறது.
13. पिबत भागवतम्। பிபத பாகவதம்.
जन्मैश्वर्यश्रुतश्रीभिरेधमानमदः पुमान्।
नैवार्हत्यभिधातुं वै त्वामकिञ्चनगोचरम्॥१-८-२६॥
सम्पदस्तु श्रेयःपरिपन्थिन्यः इत्याह। जन्म सत्कुले जन्मादिभिः एधमानः मदः यस्य सः। अभिधातुं श्रीकृष्ण गोविन्देति वक्तुमपि अकिञ्चनानां गोचरं विषयभूतम्॥श्रीधरः॥
இந்த உலகத்தில் நாம் சேர்க்கக்கூடிய ஸம்பத்துதான் நமக்கு சத்தரு என்கிறார். உயர்ந்த வம்சத்தில் பிறந்ததாலும், அதிகாரத்தினாலும், படிப்புனாலும், பணத்தினாலும், யாருக்கு தான் பெரியவனென்ற எண்ணம் வளர்கிறதோ அதனாலேயே அவனுடைய வாயிலிருந்து “ ஶ்ரீ க்ருஷ்ணா, கோவிந்தா” என்று நாமம் கூட வருவதில்லை. ஏனென்றால், அந்த க்ருஷ்ணரோ எந்த சொத்துமில்லாத, ஏழைகளான பக்தர்களுக்கு மட்டுமே தென்படக்கூடியவர்.
12. पिबत भागवतम्। பிபத பாகவதம்.
आत्मारामाश्च मुनयो निर्ग्रन्था अप्युरुक्रमे।
कुर्वन्त्यहैतुकीं भक्तिं इत्थम्भूतगुणो हरिः॥१-७-१०॥
“க்ரந்த:” என்ற ஸம்ஸ்க்ருத சொல்லிற்கு நூல் என்றும் வாஸனைகளால் ஹ்ருதயத்தில் ஏற்பட்ட கட்டு என்றும் இரண்டு பொருளுண்டு.
ஞானிகள் கூட இந்த பாகவதத்தை பறுக ஆசைப்படுகிறார்கள். எல்லா பந்தங்களும் நீங்கியவர்கள் ஞானிகள், ஆனால் பாகவதமோ ‘பித்யதே ஹ்ருதயக்ரந்தி:’ - ‘பந்தத்தை போக்குவதற்காக’ என்று சொல்கிறது. ஏற்கனவே பந்தமில்லாத ஞானிகளுக்கு இது தேவையில்லை. அதே போலே, பந்தமில்லாதவர்களான அவர்களுக்கு எந்த ஒரு சாஸ்த்ர க்ரந்தமும் தேவையில்லை. எவ்வகையில் பார்த்தாலும் அவர்கள் பாகவதத்திறகு ஆசைப்படுவது என்பது பொருந்தலியே என்றால்…. அப்பேர்ப்பட்ட ஞானிகளையும் இழுக்கக்கூடிய குணங்களை கொண்டவர் பகவான் என்கிறார்.
11. पिबत भागवतम्। பிபத பாகவதம்.
एतद्ध्यातुरचित्तानां मात्रास्पर्शेच्छया मुहुः।
भवसिन्धुप्लवो दृष्टो हरिचर्यानुवर्णनम्॥१-६-३५॥
मात्राः विषयाः तेषां स्पर्शाः भोगाः तेषामिच्छया आतुराणि चित्तानि येषां तेषां हरिचर्यानुवर्णनं यत् एतदेव भवसिन्धौ प्लवः पोतः। न केवलं श्रुतिप्रामाण्येन, किन्त्वन्वयव्यतिरेकाभ्यां दृष्टः एवेत्यर्थः॥श्रीधरः॥
விஷயபோகங்களை அடைய ஆசையால் தளர்ந்து போயி, பலம் இழந்த மனமுடையவர்களுக்கு இந்த ஸம்ஸாரக்கடலை தாண்டிவைக்கும் ஓடம் பகவத்குணத்தை பாடுவதேயாகுமின்றி வேறு உபாயமில்லை.
10. पिबत भागवतम्। பிபத பாகவதம்.
येनैवासौ न तुष्येत मन्ये तद्दर्शनं खिलम्॥१-५-८॥
“ஒரு குறையும் அற்றதும், நம்முடைய எல்லா குறைகளையும் தீர்க்கின்றதுமான பகவானுடைய குணங்களை மட்டுமே சொல்லக்கூடிய சாஸ்த்ரம் தான் சிறந்தது. அத்தகைய ஒரு க்ரந்தத்தால் தான் பகவான் சந்தோஷப் படுகிறான். அவ்வாறு பகவானை சந்தோஷப் படுத்தாத சாஸ்த்ரம் எந்த சாஸ்த்ரமாக இருந்தாலும் என்னைப் பொருத்த வரையிலும் அது ப்ரயோஜனமற்றதே” என்று வ்யாஸருடன் ஶ்ரீ நாரதர் கூறுகிறார்.
9. पिबत भागवतम्। பிபத பாகவதம்.
न चास्य कश्चिन्निपुणेन धातुरवैति जन्तुः कुमनीष ऊतीः।
नामानि रूपाणि मनोवचोभिः सन्तन्वतो नटचर्यामिवाज्ञः॥१-३-३७॥
ஒரு நடிகன் மேடையில் வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கும்பொழுது அவனுடைய உண்மையான ரூபத்தை எப்படி பார்வையாளர்கள் அறியமாட்டார்களோ(அவ்வாறு அறிந்தால் அந்த நடிகன் சரியாக நடிக்கவில்லை என்று பொருள் அல்லவா), அதேபோல் எந்த நாமமும் ரூபமும் குணமும் அற்றவரும் ஆனால் ஸ்வேச்சையாக குணத்தையும் ரூபத்தையும் நாமத்தையும் எடுத்துக் கொள்ளும் பகவானுடைய செயலை புத்தியால் மட்டுமே பார்க்கும் ஒருவனால் அறியவே முடிவதில்லை.
8. पिबत भागवतम्। பிபத பாகவதம்.
शृण्वतां स्वकथां कृष्णः पुण्यश्रवणकीर्तनः।
हृद्यन्तस्थो ह्यभद्राणि विधुनोति सुहृत्सताम्।।1-2-17।।
नष्टप्रायेष्वभद्रेषु नित्यं भागवतसेवया।
भगवत्युत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी।।1-2-18।।
सतां सुहृत् हितकारी। अभद्राणि कामादिवासनाः।।17।। भागवतानां भागवतशास्त्रस्य वा सेवया।नैष्ठिकी निश्चला विक्षेपकाभावात्।।18।। श्रीधरव्याख्या ।।
க்ருஷ்ண கதையை கேட்பதால் பகவான் உள்ளத்தில் புகுந்து ஹ்ருதயத்தில் இருக்கின்ற காமாதி வாஸனைகளை நீக்குகிறார். அதற்கு காரணம் 'பக்தர்களுக்கு ஹிதத்தை செய்பவர் க்ருஷ்ணர்' என்கிறார். அவ்வாறு அபத்ரங்கள் நீங்கின பிறகு பாகவதர்களையும், பாகவத ஶாஸ்த்ரத்தையும் (இரண்டு விதமாகவும் சொல்கிறார் ஸ்ரீதரர்) நித்யமும் சேவிப்பதால் பகவானிடத்தில் அசஞ்சல பக்தி ஏற்படுகிறது. வாஸனைகள் இருந்தால் பக்தி கலையும். கதாஶ்ரவணத்தினால் வாஸனை நீங்கியதால் பக்தி கலையாது என்கிறார்.
7. पिबत भागवतम्। பிபத பாகவதம்.
न वै जनो जातु कथञ्चनाव्रजेन्मुकुन्दसेव्यन्यवदङ्ग संसृतिम्।
स्मरन्मुकुन्दाङ्घ्र्युपगूहनं पुनः विहातुमिच्छेन्न रसग्रहो यतः॥
यदुक्तं “यत्र क्व वा भद्रमभूत्” इति तदुपपादयति “न वा” इति। मुकुन्दसेवी जनो जातु कदाचित्कथञ्चन कुयोनिगतोऽपि संसृतिं नाव्रजेन्नाविशेत्। अंग अहो! अन्यवत्केवलकर्मनिष्ठवदिति वैधर्म्ये दृष्टान्तः। कुतः? इत्यत आह - मुकुन्दाङ्घ्रेरुपगूहनं आलिङ्गनं पुनः स्मरन् विहातुं नेच्छेत्। यतऽयं जनो रसग्रहो रसेन रसनीयेन गृह्यते वशीक्रियते यद्वा रसे रसनीये ग्रह आग्रहो यस्य॥ श्रीधरः॥
“பகவச்சரணத்தை விட்டு விட்டு கர்மாவை மட்டிலும் செய்கிறவன் கரை ஏறவே முடியாது.ஆனால், பகவத்பக்துக்கு கர்மா தவறி போனாலுங்கூட அவன் விழமாட்டான்” என்று முன்பு சொன்னதை இந்த ச்லோகத்தால் உறுதிப் படுத்துகிறார்.
பகவானுடைய சரணத்தை ஆலிங்கனம் செய்த பக்தன் எப்பொழுதும், எக்காரணத்தினாலும், ஒருவேளை கர்ம வசத்தால் அதமஜன்மா கிடைத்தாலும் அந்த ஆலிங்கனத்தின் ரஸம் ஹ்ருதயத்திலேயே தங்கியிருப்பதால் அதையே நினைத்துக் கொண்டு மீண்டும் ஸம்ஸாரத்தில் விழமாட்டான்.
6. पिबत भागवतम्। பிபத பாகவதம்.
आमयो यश्च भूतानां जायते येन सुव्रत।
तदेव ह्यामयं द्रव्यं न पुनाति चिकित्सितम्॥१-५-३३॥
ननु संसारहेतोः कर्मणः कथं तापत्रयनिवर्तकत्वं, सामग्रीभेदेन घटते इति सदृष्टान्तमाह द्वाभ्याम्। य आमयो येन घृतादिना जायते तदेव केवलमामयकारणभूतं द्रव्यं तमामयं न पुनाति न निवर्तयतीत्यर्थः। किन्तु चिकित्सितं द्रव्यान्तरैर्भावितं सत् पुनात्येव यथा॥श्रीधरः॥
விஷம் மரணத்திற்கு காரணமாகிறது. ஆனால், அதே விஷத்தை வேறு சில பொருட்களுடன் சேர்த்து பருகினால் அதுவே மருந்தாக ஆகி விடுகின்றது. அது மாதிரி கர்மா ஸம்ஸாரத்துக்கு ஹேதுவாக இருக்கின்றது. ஆனால், அதே கர்மாவை பகவானுக்கு ஸமர்ப்பண புத்துயோடு செய்தோமானால் அதுவே ஸம்ஸாரத்தை நீக்கும் மருந்தாகி விடுகின்றது.
5. पिबत भागवतम्। பிபத பாகவதம்.
न यद्वचश्चित्रपदं हरेर्यशो जगत्पवित्रं प्रगृणीत कर्हिचित्।
तद्वायसं तीर्थमुशन्ति मानसा न यत्र हंसा निरमन्त्युशिक्क्षयाः॥
॥१-५-१०॥
वासुदेवव्यतिरिक्तान्यविषयज्ञानवदेव अन्यविषयं वाक्चातुर्यं च खिलमेवेत्याह “न” इति। चित्रपदमपि यद्वचः हरेर्यशः न प्रगृणीत तद्वायसं तीर्थं काकतुल्यानां कामिनां रतिस्थानं उशन्ति मन्यन्ते। कुतः? मानसाः सत्त्वप्रधाने मनसि वर्तमानाः हंसाः यतयः यत्र न निरमन्ति कर्हिचिदपि नितरां न रमन्ते। उशिक्क्षयाः उशिक् कमनीयं ब्रह्म क्षयः निवासः येषां ते। यथा प्रसिद्धाः हंसाः मानसे सरसि चरन्तः कमनीयपद्मखण्डनिवासाः त्यक्तविचित्रान्नादियुक्तेऽपि उच्छिष्टगर्ते काकक्रीडास्थाने न निरमन्ते इति श्लेषः॥श्रीधरः॥
வாஸுதேவனை காட்டிலும் அன்யவிஷயத்தை அறிவது என்பது ப்ரயோஜனமற்றது என்று கூறப்பட்டது. இப்பொழுது “வாஸுதேவனின் குணங்களை வர்ணிக்காத ஒரு க்ரந்தம் எவ்வளவு கவிதா ரஸத்தோடு கூடியதாக இருந்தபோதிலும் அது வீணே. அதை மஹான்கள் ஏற்றுக்கொள்வதில்லை” என்கிறார்.
வாயஸ: என்றால் காகம்.வாஸுதேவ குணத்தை வர்ணிக்காத, ச்ருங்காராதி ரஸங்கள் நிரம்பிய அன்ய க்ரந்தத்தை காகம் போலே இஷ்டம்போல் திரியும் காமிகளுக்கு ரதிஸ்தானமானது என்று கறுதுகிறார்கள் ஸர்வஸங்க பரித்யாகம் செய்த மஹான்கள்.
மானஸா: என்ற சொல்லிற்கு இரண்டு பொருட்களுண்டு. ‘ஸத்த்வ ப்ரதானமான மனதிலே ரமித்திருப்பவரான மஹான்கள், மானஸம் என்ற குளத்தில் ஸஞ்சரிக்கும் அண்ணம்’ என்று.
அழகான தாமரை பூத்த மானஸ ஸரஸில் ஸஞ்சரித்துக் கொண்டு அதில் இருக்கும் தாமரை தண்டுகளை சாப்பிட்டு ஜலம் குடித்திக் கொண்டிருக்கும் அண்ணமானது ஆகாரம் கிடைக்காமல் உயிரே போனாலும் காகம் சாப்பிட்டு எச்சிலான குளத்தில் சாப்பிடாதல்லவா அதுபோலே பகவத்குணம் சொல்லாத அன்ய க்ரந்தத்தை மஹான்கள் ஏற்பதில்லை.
4. पिबत भागवतं। பிபத பாகவதம்.
कलौ नष्ट दृशामेष पुराणार्कोऽधुनोदितः।
तत्र कीर्तयतो विप्राः विप्रर्षेर्भूरितेजसः॥१-३-४४॥
धर्मादिप्रकाशके श्रीकृष्णरूपे सूर्ये धर्मज्ञानादिभिस्सह स्वधामोपगते प्राप्ते सति कलौ निमित्ते च सति नष्टदृष्टीनां लुप्तप्रज्ञानां अधुना कलियुगे प्रज्ञाप्रवर्तनेन धर्मादिप्रकाशकः एषः पुराणरूपः अर्कः सूर्यः उदितः इत्यन्वयः। अत्र कृष्णस्य सूर्यत्वं मथुरायाः उदयशैलत्वं प्रभासस्यास्ताचलत्वं शिष्टानां चक्रवाकत्वं दुष्टानां नीहारत्वं पापानां तमस्त्वं धर्मादीनां प्रकाशत्वं भक्तानां कमलत्वं पुराणस्य सूर्यत्वं कलेः रात्रित्वं च बोध्यम्। तथा च यथा रात्रिदोषेण लुप्तदृष्टीनामेव सूर्यः प्रकाशकः भवति न तु स्वतोऽन्धानां सूर्ये उदितेऽपि अन्धानां उलूकादीनां च प्रकाशाभावस्य प्रसिद्धत्वात्। तथा कलिदोषेण लुप्तप्रज्ञानामेव अयं प्रकाशकः न तु स्वतः प्रज्ञाशून्यानां विषयाविष्टानां दैत्यादीनां, अतः कथमस्य विद्यमानत्वे सर्वेषां न धर्मादिप्रकाशः इति न शङ्का अवकाशः इति सूचितम्। उदितः इत्यस्य अनादित्वमपि सूचितम्। विद्यमानस्य प्रादुर्भावस्यैव उदयशब्दार्थत्वात्॥श्रीगिरिधरः॥
தர்மம் முதலியவைகளை ப்ரகாசப்படுத்திய க்ருஷ்ணனாகிய ஸூர்யன் மறைந்த பொழுது அதனால் கண் தெரியாதவர்களுக்கு அதாவது ஞானம் லுப்தமானவர்களுக்கு ஞானத்தை கொடுப்பதன் மூலம் தர்மாதிகளை ப்ரகாசிக்க செய்யும் ஸூர்யனாக்கும் இந்த புராணம் என்கிறார்.
இங்கு க்ருஷ்ணன் ஸூர்யன் என்றும், மதுரா உதயாத்ரி என்றும், ப்ரபாஸம் அஸ்தாசலம் என்றும், சிஷடர்கள் ச்சக்ரவாகம் என்றும், துஷ்டர்கள் பனி என்றும், பாபிகள் இருள் என்றும், தர்மம் முதலிவைகள் வெளிச்சம் என்றும், பக்தர்கள் தாமரை என்றும், பாகவத புராணம் ஸூர்யன் என்றும், கலி இரவு என்றும் ஸாம்யங்கள். இருளால் யாருக்கு கண்கள் தெரிவதில்லையோ அவர்களுக்கே ஸூர்யோதயத்தால் கண் தெரிகிறது. குருடர்களுக்கும், ஆந்தைக்கும் ஸூர்ய வெளிச்சத்திலும் கண் தெரியாதது போல் கலி தோஷத்தால் ஞானம் லுப்தமானவர்களுக்குத் தான் பாகவதத்தால் வெளிச்சமேத் தவிர ஸ்வபாவத்திலேயே துஷ்டர்களுக்கும், தைத்யர்களுக்கும் இது ஞானத்தை ஏற்படுத்தவில்லை என்கிறார்.
3. पिबत भागवतम्। பிபத பாகவதம்.
मुमुक्षवो घोररूपान् हित्वा भूतपतीनथ।
नारायणकलाश्शान्ता भजन्ति ह्यनसूयवः॥१-२-२६॥
ननु अन्यानपि केचिद्भजन्तः दृश्यन्ते, सत्यं, मुमुक्षवस्त्वन्यान्न भजन्ति किन्तु सकामा एवेत्याह मुमुक्षव इति द्वाभ्याम्। अनसूयवः देवतान्तरानिन्दकाः सन्तः॥ श्रीधरः॥
ஒரு சிலர் பகவானை விட்டு தேவதாந்தரங்களை சேவிக்கின்றனர். யார் ஸகாமர்களோ அவர்கள் தான் அவ்வாறு செய்கின்றனர். யாருக்கு எந்த ஒரு காம்மும் இல்லையோ, யார் பகவானிடத்தில் பக்தி கொண்டவர்களோ, யார் மோக்ஷத்தை விரும்புகின்றனரோ அவர்கள் பகவானைத் தவிர அன்ய தேவதையை சேவிக்கமாட்டார்கள். இதற்குத் தான் ஏகாந்த பக்தி என்று பெயர். மேலும், இவர்கள் தேவதாந்தரங்களையோ, தேவதாந்தர பக்தர்களையோ நிந்திக்கமாட்டார்கள். “ந க்ரோதோ ந ச மாத்ஸர்யம் ந லோபோ நாசுபாமதி:। பவந்தி க்ருதபுண்யானாம் பக்தானாம் புருஷோத்தமே॥” என்று சொல்லப்படுகிறதல்லவா…
2. पिबत भागवम्। பிபத பாகவதம்.
स वेद धातुः पदवीं परस्य दुरन्तवीर्यस्य रथाङ्गपाणेः।
योऽमायया सन्ततयानुवृत्त्या भजेत तत्पादसरोजगन्धम्॥१-३-३८॥
भक्तस्तु कथञ्चिज्जानातीत्याह स वेदेति। अमाययाऽकुटिवभावेन सन्ततया निरन्तरतया अनुवृत्त्या आनुकूल्येन भजेत॥श्रीधरः॥
ननु यदि कोऽपि न जानाति तर्हि निर्मोक्षप्रसङ्गः स्यादित्यत आह - भक्तस्त्विति। धातुः सर्वपालकस्य पदवीं स्वरूपं “स्वरूपेऽध्वनि पादुके पदवी स्थानमात्रके” इति निरुक्तिः॥वंशीधरः॥
பகவானின் ஸ்வரூபம் யாராலையும் அறிந்து கொள்ள முடியாததாக இருக்கின்றது. அப்படி இருக்கும் பக்ஷத்தில் மோக்ஷமென்பது யாருக்கும் ஸாத்யமில்லை என்று ஆகிவிடுமே என்று சிந்தித்து கூறுகிறார் “ யார் ஏகாந்த பாவத்தில், எந்த ஒரு பலாபேக்ஷையும் இல்லாமல், இந்த கார்யம் செய்தால் பகவானுக்கு பிடிக்கும் என்ற ஆனுகூல்ய புத்தியோடு இடைவிடாது பக்தியை செய்கிறானோ அவன் தான் பரம் பொருளும், ஸர்வ பாலகனும் ஆன சக்ரபாணியின் ஸ்வரூபத்தை அறிகிறான்” என்று.
பதவீ என்ற சொல்லிற்கு ஸ்வரூபம், வழி, பாதுகை, இருப்பிடம் என்று பொருட்கள் உண்டு. இந்த இடத்தில் ஸ்வரூபமென்று எடுத்துக் கொள்ளவேண்டும்.
1. पिबत भागवतम्॥ பிபத பாகவதம்.
वासुदेवपरा वेदा वासुदेवपरा मखाः।
वासुदेवपरायोगा वासुदेवपराः क्रियाः॥
वासुदेवपरं ज्ञानं वासुदेवपरं तपः।
वासुदेवपरो धर्मो वासुदेवपरा गतिः॥१-२-२९॥
मोक्षप्रदत्वात् वासुदेवः भजनीयः इत्युक्तम्। सर्वशास्त्रतात्पर्यगोचरत्वादपि इत्याह द्वाभ्याम्॥ वासुदेव एव परस्तात्पर्यगोचरो येषां ते। ननु वेदा मखपरा दृश्यन्ते इत्याशंक्य तेऽपि तदाराधनार्थत्वात् तत्परा एवेत्युक्तं - मखा इति। योगा योगशास्त्राणि, तेषामपि आसनप्राणायामादिक्रियापरत्वमाशंक्य तासामपि तत्प्राप्त्युपायत्वात् तत्परत्वमुक्तम्। ज्ञानं ज्ञानशास्त्रं, ननु च तत् ज्ञानपरमेवेत्याशंक्य ज्ञानस्यापि तत्परत्वमुक्तम्। तपोऽत्र ज्ञानम्। धर्मः धर्मशास्त्रं दानव्रतादिविषयम्। ननु तत्स्वर्गपरमित्याशंक्य गम्यते इति गतिः स्वर्गादिफलं साऽपि तदानन्दांशरूपत्वात् तत्परैवेत्युक्तम्॥
மோக்ஷத்தை அளிப்பவர் வாஸுதேவன். ஆகையால், அவரையே நாடவேண்டியது என்று சொல்லி ஆயிற்று. இப்பொழுது அவர் தான் நாட வேண்டியவர் என்று “எல்லா ஶாஸ்த்ரங்களாலும் அறியக்கூடியவர்” என்ற மற்றொரு காரணத்தாலும் உறுதிப் படுத்துகிறார்.