இப்படிக்கு கிருஷ்ணன்!!! – Conversation series with God Part 4

[A series of writing dedicated to Sri Premikavaradhan Madhurisakhi and H.H. Sri Sri Muralidhara Swamiji, by Priya ji, Singapore Namadwaar]

Read complete series here

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே 

பக்தன் : கண்ணா உலகளந்தவனே!!
உன் மீது பக்தன் கொண்ட அன்பினை எவ்வாறு அளவிடுவாய் ??

கிருஷ்ணன் : ம்ம்ம்..

அவன் இது வரை சொன்ன நாம எண்ணிக்கை கொண்டு தான்!!
நான் அவன் மீது கொண்ட அன்பின் அளவும் அவ்வளவே!!

--------------------------------------------------

கிருஷ்ணன் : முன்கோபி (short tempered) பற்றி ஒரு கவிதை சொல்லேன்..

பக்தன் : எப்படிப்பட்ட முன்கோபியரும் உன் முன் ‘கோபியரே’..

--------------------------------------------------

கிருஷ்ணன் : வாராவாரம் நாமாதுவார் வந்து நாமயோகாவில் என்ன வேண்டுவாய் ?

பக்தன் : "அடுத்த வாரமும் நாமாதுவார் வந்து உன் நாமா பாட வேண்டும்...
நாமாவை அள்ளி அள்ளி பருக வேண்டும்" என்று கேட்பேன் கண்ணா!!!
ஏன் தெரியுமா? வாரம் முழுக்க காத்திருப்பேன் அந்த ஒருநாளுக்காக.
ஆம்!!ஆறு நாள் தவமிருந்து ஏழாம் நாள் பெற்றெடுப்பேன்,
உன்னை அருகிருந்து காணும் பாக்கியத்தை!!!
பாக்கியத்தை பெற்றெடுப்பதால் நானும் கூட பாக்கியமே..

--------------------------------------------------

பக்தன் : வீடு தேடி வருவாயா என் விட்டலா?
கிருஷ்ணன் : நிச்சயமாய்...
உன் நாமம் மறந்து
என் நாமமே சொல்...

தயங்காமல்
உன் இல்லம் தேடி வருவேன் !!!

--------------------------------------- கவிதைகள் --------------------------------------

உயிர் எங்கே ஒளிந்திருக்கிறது??

மனிதனின் உடலில் இருக்கும் பத்து கோடி செல்களில்
எந்த செல்லில் உயிர் ஒளிந்திருக்கிறது என்று
விஞ்ஞானிகள் தேடிகொண்டிருகிரார்களாம்..விடு!..
அவர்களுக்கெங்கே தெரியப் போகிறது?
என் உயிர் ஓடி ஒளிந்திருப்பது..
உன் உதட்டோரப்புன்னகையில் தான் என்று!!

பக்தி எனும் முத்து
உள்ளம் எனும் சிப்பியில்
பகவத் நாமா எனும் ஒரு துளி விழுகையில் தான்
உள்ளிருக்கும் பக்தி இறைவனை அலங்கரிக்கும் நல் முத்தாகிறது
முக்திக்கும் அதுவே வித்தாகிறது

ரிங் டோன்

இதயத்துடிப்பில் இப்போது இருக்கும்
ரிங் டோன் பிடிக்கவில்லை.
அதை நாமா டியூன் ஆக்க யாராவது
வழி சொல்லுங்களேன்.!!!

புன்னகை

அழகான கவிதை படிக்கும் போதெல்லாம் உதட்டோரத்தில் புன்னகை வருமாம்..
நீ ஏன் கிருஷ்ணா, எப்போதும் புன்னகைத்தபடியே நிற்கிறாய்?
நாங்கள் சொல்லும் நாமா எல்லாம் உனக்கு கவிதையாய் தெரிகிறதா?

இதயம்

பாலைவனத்தில் இருப்பதனால்
தாகம் தவிர்க்க
ஒட்டகத்திற்கு மூன்று இரைப்பைகளாம்..
ஒன்றில் தண்ணீர் தீர்ந்தால் இன்னொன்றிலிருந்து
எடுத்துக்கொள்ளுமாம்.
கிருஷ்ணா, நீ ஒரு கஞ்சன்.
எனக்கு மட்டும் ஒரு இதயம் மட்டுமே
கொடுத்திருக்கிறாய்.
நாமா தாகம் தீர இன்னும் சில இதயங்கள் கொடு.

நாமா இருக்கு எனக்கு !!!

பெற்ற தாய் தகப்பன்
தள்ளி வைத்துவிட்டார்கள் என்னை
கவலை இல்லை..
நாமா இருக்கு எனக்கு !!

சொந்த பந்தம்
எள்ளி நகையாடுது என்னை..
கவலை இல்லை..
நாமா இருக்கு எனக்கு !!

பெற்ற பிள்ளைகள்
மதிப்பதில்லை என்னை..
கவலை இல்லை..
நாமா இருக்கு எனக்கு !!

கட்டிய மனைவி
திட்டுகிறாள் என்னை
"பிழைக்கத் தெரியாத மனுஷன்"
கவலை இல்லை..
நாமா இருக்கு எனக்கு !!

ராப்பகலா உழைக்கிறேன்
தகுந்த கூலி இல்லை
கவலை இல்லை..
நாமா இருக்கு எனக்கு !!

வேற வேலை தேடுறேன்
இன்னும் கிடைக்கலை
கவலை இல்லை..
நாமா இருக்கு எனக்கு !!

வீடு வாசல் கட்டல
சொத்து சுகம் சேர்க்கலை
கவலை இல்லை..
நாமா இருக்கு எனக்கு !!

என்னை அழைக்க
எமன் வந்துட்டான்
கவலை இல்லை..
நாமா இருக்கு எனக்கு !!

சொர்க்கத்துல இடம் இல்லையாம்
நரகம் கொண்டு போறாங்களாம்
கவலை இல்லை..
நாமா இருக்கு எனக்கு !!

Leave a Reply