பால முகுந்தாஷ்டகம் – Bala Mukundaashtakam on Baby Krishna!

கராரவிந்தேன பதாரவிந்தம்
முகாரவிந்தே வினிவேஶயந்தம் ⎸
வடஸ்ய பத்ரஸ்ய புடே ஶயானம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

தாமரை போன்ற கையினால், தாமரை போன்ற சரணத்தை, தாமரை போன்ற முகத்தில் வைத்து கொள்கின்றவரும், ஆலிலை மேல் பள்ளி கொண்டவருமான பால முகுந்தனை மனதினால் நினைக்கின்றேன்.

ஸம்ஹ்ருத்ய லோகான் வடபத்ரமத்யே
ஶயானமாத்யந்த விஹீனரூபம் ⎸
ஸர்வேஸ்வரம் ஸர்வஹிதாவதாரம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

ஸர்வ லோகங்களையும் ஸம்ஹரித்து ஆலிலையின் மத்தியில் சயநித்திருபவரும், ஆதி அந்தம் அற்ற உருவத்தை உடையவரும், எல்லோருக்கும் ஈஸ்வரனும், எல்லோருடைய நன்மையை பொருட்டு அவதாரம் செய்தவருமான பால முகுந்தனை மனதினால் நினைக்கின்றேன்.

இந்தீவரஶ்யாமள கோமளாங்கம்
இந்த்ராதிதேவார்ச்சிதபதாபத்மம் ⎸
சந்தானகல்பத்ருமமாஶ்ரிதானாம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

நீலோத்பல புஷ்பம் போல் கருமையும், அழகும் வாய்ந்த சரீரத்தை உடையவரும், இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களால் பூஜிக்கப்பட்ட பாத கமலத்தை உடையவரும், அண்டியவர்களுக்குப் புத்திர லாபத்தை கொடுக்கும் கல்பக வ்ருக்ஷம் போன்றவருமான பால முகுந்தனை மனதினால் நினைக்கின்றேன்.

லம்பாலகம் லம்பிதஹாரயஷ்டிம் 
ஶ்ருங்காரலீலாங்கிததந்தபங்க்திம் ⎸
பிம்பாதரம் சாருவிஶாலநேத்ரம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

முன்புறத்தில் தொங்குகின்ற கேசங்களை உடையவரும், தொங்குகின்றதும், நீண்டதுமான ஹாரத்தை உடையவரும், ஶ்ருங்கார ரஸத்துடன் கூடிய அழகிய பற்களின் வரிசையை உடையவரும், கோவைபழம் போன்ற உதட்டை உடையவரும், அழகியதும் விசாலமான கண்களை உடையவருமான பால முகுந்தனை மனதினால் நினைக்கின்றேன்.

ஶிக்யே நிதாயாத்யபயோததீநி
பஹிர்கதயாம் வ்ரஜநாயிகாயாம்  ⎸
புக்த்வா யதேஷ்டம் கபடேன சூப்தம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

யசோதையானவள் உறியில் நல்ல பால், தயிர் இவைகளை வைத்துவிட்டு வெளியே சென்றபொழுது, அவைகளை தன் இஷ்டத்திற்கு சாப்பிட்டுவிட்டு, தூங்குவது போல் கபடம் செய்யும் பால முகுந்தனை மனதினால் நினைக்கின்றேன்.

களிந்த ஜாந்தஸ்திதகாளியஸ்ய
பணாக்ரரங்கே நடனப்ரியந்தம் ⎸
தத்புச்சஹஸ்தம் ஶரத்திந்துவக்த்ரம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

காளிந்தி என்னும் மடுவில் இருக்கிற காளியன் என்ற பாம்பின் படமாகிய அரங்கத்தில் நடனம் செய்வதில் ப்ரியம் உள்ளவரும், காளியனுடைய வாலின் நுனியைக் கையில் வைத்து கொண்டவரும் சரத் காலத்து சந்திரனைப் போன்ற முகமுடையவருமான பால முகுந்தனை மனதினால் நினைக்கின்றேன்.

உலூகலே பத்தமுராரசஶெளர்யம்
உத்துங்கயுக்மார்ஜுன பங்கலீலம்  ⎸
உட்புல்லபத்மாயதசாருநேத்ரம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

உரலில் கட்டப்பட்டவரும், மஹா சூரரும், மிகவும் உயர்ந்த இரண்டு மருத மரங்களை கீழே வீழ்த்துதல் என்ற விளையாட்டை செய்கின்றவரும், மலர்ந்த செந்தாமரை போன்ற நீண்ட அழகிய கண்களை உடையவருமான பால முகுந்தனை மனதினால் நினைக்கின்றேன்.

ஆலோக்ய மாதுர்முகமாதரேண
ஸ்தணன்யம் பிபந்தம் ஸரசஸீருஹாக்ஷம்  ⎸
ஸச்சின்மயம் தேவமனந்தரூபம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

அன்பாக, அன்னையின் முகத்தை பார்த்து ஸ்தன்ய பானம் செய்கின்றவரும், செந்தாமரை போன்ற இரு கண்கள் உடையவரும், ஸத்ரூபியும், சித்ரூபியும், வெகு ரூபங்களை உடையவரும், தேவருமான  பால முகுந்தனை மனதினால் நினைக்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>